விஜய் டிவியில் பிரபலமான சீரியல்கள் ஆனா சரவணன் மீனாட்சி மற்றும் பாரதிகண்ணம்மா உள்ளிட்ட பல சீரியல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை விஜயலட்சுமி. அதேசமயம் பல திரைப்படங்களிலும் நடித்துள்ள பழம்பெரும் நடிகையான விஜயலஷ்மி தன்னுடைய 70 வயதில் காலமானார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாத்ரூமில் வழுக்கி விழுந்து அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர் சோர்வாகவே இருந்துள்ளார். இந்நிலையில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்துள்ளது. அவருக்கு ஏற்கனவே சிறுநீரக பிரச்சனையும் இருந்துள்ளது. அவரின் மறைவுக்கு தமிழ் சின்னத்திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.