
ஐபிஎல் தொடரின் 18 ஆவது லீக் போட்டியானது சண்டிகரில் நேற்று நடைபெற்றது. இதில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் களமிறங்கியது. அந்த அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது டிரெஸ்சிங்க் ரூமில் ஜோப்ரா ஆர்ச்சர் குட்டி தூக்கம் போட்டுக் கொண்டிருந்தார். இதுகுறித்த புகைப்படங்கள் கேமராவில் சிக்கி இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கோடு பஞ்சாப் அணி களமிறங்கியது. முதலில் ஓவரை ஜோப்ரா ஆர்ச்சர் வீசினார். முதல் ஓவரின் முதல் பந்தில் பிரியான்ஷூ ஆர்யாவை டக் அவுட் ஆக்கினார். தொடர்ந்து கடைசி பந்தில் ஸ்ரேயாஸ் ஐயரை 10 ரங்களில் அவுட் ஆக்கினார். ஒரே ஓவரில் இரண்டு முக்கிய விக்கெட் டுகளை தூக்கினர். இதை பார்த்த இணையவாசிகள் தூக்கம் முக்கியம் பிகிலு. ஜோப்ரா ஆர்ச்சர் இதற்காக தான் குட்டி தூக்கம் போட்டார் என்று மீம்களை தெறிக்க விட்டு வருகிறார்கள்.