
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவியின் தரப்பில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேசினர். பின்னர் சம்பந்தப்பட்ட வாலிபர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் அந்த மாணவி திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது சிறுமி அந்த வாலிபரை காதலித்து வந்த நிலையில் அவருக்கு ஒரு தங்கை இருக்கிறார்.
அவர் சிறுமியிடம் தன்னுடைய அண்ணனை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். அதாவது திருமணம் செய்து கொண்டால் வழக்கிலிருந்து தன்னுடைய அண்ணன் தப்பித்து விடுவார் என்பதால் அப்படி கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமி தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்த நிலையில் தற்போது சம்பந்தப்பட்ட வாலிபர், அவரின் தந்தை காத்தவராயன், அவரின் தங்கை ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இதில் காத்தவராயனை காவல்துறையினர் கைது செய்த நிலையில் தலைமறைமாக இருக்கும் அண்ணன் தங்கையை வலைவீசி தேடி வருகின்றனர்.