
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நிவின்பாலி. இவர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் சமீபத்தில் பெண் ஒருவர் துபாயில் வைத்து நடிகர் நிவின்பாலி தன்னை பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாகவும் அந்த சம்பவம் நடந்த தேதியையும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவர் குறிப்பிட்டிருந்த அதே தேதியில் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு ஹோட்டலில் நிவின் பாலி தங்கி இருந்ததற்கான ரசீது வெளியானதோடு அந்த சமயத்தில் அவர் வருஷங்கள் சேஷம் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது.
இதனால் அந்த பெண் கூறிய குற்றச்சாட்டு பொய் என்று தெரிய வந்ததால் அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அந்த விசாரணையில் தூக்க கலக்கத்தில் தேதியை மாற்றி கூறிவிட்டதாக அந்த பெண் கூறியுள்ளார். இது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நடிகர் நிவின் பாலி முன்னதாக தன் மீது எந்த ஒரு குற்றச்சாட்டும் கிடையாது எனவும் போலியான குற்றச்சாட்டுகளுக்கு சட்டப்படி பதிலடி கொடுப்பேன் என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.