
சென்னையில் வசித்து வருபவர் அருண்குமார் – துர்கா தம்பதிகள். இவர்களுக்கு திருமணமாகி மூன்று வருடங்கள் ஆன நிலையில் இவர்களுக்கு ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது. துர்கா கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் தன்னுடைய தாய் வீட்டில் தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் நேற்று முன்தினம் மதியம் துர்கா தூங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது குழந்தை தாயின் பக்கத்தில் விளையாடிக் கொண்டு இருந்தது.
சிறிது நேரத்தில் குழந்தையை காணவில்லை என்று துர்கா தேடியுள்ளார். அப்பொழுது வீட்டின் வெளியே இரண்டடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில் குழந்தை தவறி விழுந்திருப்பது தெரிய வந்தது., இதனால் அதிர்ச்சி அடைந்த துர்கா குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் . அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.