கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் மரத்திகா அலிகான். இவர் மலப்புரத்தில் இருந்து டெல்லிக்கு செல்லும் விரைவு ரயில் ஒன்றில் பயணம் செய்துள்ளார். அப்பொழுது தெலுங்கானா மாநிலம் வாரங்கல் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது அவர் படுத்திருந்த இருக்கைக்கு மேலே இருந்த மிடில் பெர்த் உடைந்து அவருடைய கழுத்தில் விழுந்துள்ளது. இதனால் அவருடைய எலும்புகள் உடைந்து நரம்புகள் பாதிக்கப்பட்டதில் சம்பவ இடத்திலேயே அவருக்கு கை கால்கள் செயல் இழந்ததாக கூறப்படுகிறது .

இதனை அடுத்து இவரை மீட்டு ஹைதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்த நிலையில் இவர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.