
சென்னை டி.பி சத்திரம் பகுதியில் இஸ்ரவேல் (20) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்ததாக கூறப்படும் நிலையில் இவர் மீது அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளது. இவர் பள்ளி மாணவி ஒருவரை காதலித்து வந்த நிலையில் இருவரும் அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றி திரிந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் கடந்த சனிக்கிழமை இரவு பெரிய மேடு பகுதியில் ஒன்றாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பிரபல ரவுடியான அப்பாஸ் என்பவர் வழி மறித்து தகராறு செய்துள்ளார். அவர் மாணவியிடம் தவறான முறையில் நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் அவர்களை அக்கம் பக்கத்தினர் விலக்கி விட்டனர்.
ஆனால் அப்பாஸ் இஸ்ரவேல் மற்றும் அவருடைய காதலியை கொலை செய்யாமல் விடமாட்டேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இஸ்ரவேல் தன் வீட்டின் மொட்டை மாடியில் காதலியுடன் படுத்து தூங்கியுள்ளார். அப்போது அப்பாஸ் தன்னுடைய நண்பர்கள் 3 பேருடன் அங்கு சென்றுள்ளார். அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த வாலிபர் மற்றும் அவருடைய காதலியை அரிவாளால் சரம் மாறியாக வெட்டினார்.
இவர்களுடைய அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வரவே தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து வெட்டுப்பட்ட இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அப்பாஸ் மற்றும் அவருடைய நண்பர்கள் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.