தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் பெரிய கருப்பன் என்ற 23 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு திடீரென ஒரு வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பின்னர் அங்க தூங்கிக் கொண்டிருந்த ஒரு 55 வயது பெண்ணை அவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்த நிலையில் அந்தப் பெண் பயத்தில் கத்தி கூச்சலிட்டார். அவருடைய அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடிவந்து பெரியகருப்பனை பிடித்தனர்‌.

பின்னர் இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலையில் போலீசாரிடம் வாலிபரை ஒப்படைத்தனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்த நிலையில் காவல்துறையினர் பெரிய கருப்பன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.