கடலூர் மாவட்டம் மேல பழஞ்சநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி சினேகா(24). விக்னேஷ் அந்த பகுதியில் ஆயில் மில் நடத்தி வருகிறார். நேற்று மாலை அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த விக்னேஷ் சினேகா தூக்கத்தில் இருந்து எழுப்பியதாக கூறப்படுகிறது.

இதனால் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கோபத்தில் விக்னேஷ் மண்ணெண்ணையை சினேகா மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சினேகாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விக்னேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்போகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.