மன்னர் ஆட்சி காலத்தில் கருப்பு இனத்தவர்களை விலைக்கு வாங்கி அடிமைகளாக வேலைக்கு வைத்துக் கொண்டார்கள். வேலைக்கு வரும் அடிமைகள் பாதாள சிறையில் அடைக்கப்படுவார்கள். இந்த நிலையில் கட்டிடக்கலைஞரான ரஸ்ஸல் என்பவர் பாதாள சிறை பற்றி ஒரு வீடியோவை வெளியிட்டார். அது சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அந்த இடம் தான்சானியா நாட்டின் சாண்சிபார் நகரில் இருக்கிறதாம். அந்த வீடியோவில் ரஸ்ஸல் கூறியதாவது, இந்த இடம் மிகவும் சிறியதாக உள்ளது.

வேதனையும் துன்பமும் நிறைந்த இடம் இதுதான். 1800-களில் சான்சிபாரில் இருக்கும் ஸ்டோன்டவுனில் ஓமானி அரேபியர்களால் சிறையில் அடைக்கப்பட்ட அடிமைகள் இன்று தான் தங்கியிருந்தார்கள். இந்த குறுகிய இடம் தான் மலம் கழிக்கவும், தூங்கவும் ஒரே இடமாக இருப்பதுடன், தண்ணீரும் அசுத்தமாக தான் உள்ளது. இங்கு வெளிச்சம் அவ்வளவாக வராததால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாக இருந்துள்ளது. இந்த குறுகிய இடத்தில் 70 பேர் வரை அடைக்கப்பட்டு இருப்பார்கள். அனைத்து கொடுமைகளிலும் உயிர் பிழைத்தவர்கள் மற்றவர்களுக்கு அடிமையாக விற்கப்பட்டார்கள் என ரஸ்ஸல் கூறுகிறார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.