
இந்திய வானிலை மையம் கள்ளக் கடல் எச்சரிக்கை விடுத்திருப்பதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை முதல் வேம்பார் வரையிலான கடற்கரையில் 2.7 மீட்டர் உயர அலைகள் எழும்பக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தூத்துக்குடி கடல் பகுதியில் 45 முதல் 55 கிலோமீட்டர் வரை காற்று வேகமாக வீசகூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அறிவுறுத்துள்ளார்.
எனவே கடற்கரையை ஒட்டி அமைத்துள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் கடற்கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் கடலின் அருகில் செல்ல வேண்டாம் , என்றும் கடற்கரையில் நடைபயிற்சி செய்வோர் கடலில் இறங்கி குளிக்கவே கூடாது என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.