
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது என டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் படை, ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல் படையினர் 5,049 பேரை மீட்டிருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ900 கோடியை டிசம்பர் 12-ம் தேதியே கொடுத்துவிட்டோம் என மத்திய என அவர் கூறியுள்ளார். மேலும் இந்த நிகழ்வை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என அமைச்சர் கூறியுள்ளார்.