
தமிழகத்தில் வெள்ள பாதிப்பை ஒட்டி தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில் சேவைகளில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இன்று நெல்லை மற்றும் சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் இரு மார்க்கமும் ரத்து செய்யப்படுகிறது. திருச்செந்தூர் மற்றும் சென்னை எழும்பூர் விரைவு ரயில் இன்று கோவில்பட்டியில் இருந்து புறப்படும்.
நெல்லை மற்றும் தாதர் விரைவு ரயில் மதுரையில் இருந்து புறப்படும். மதுரை மற்றும் புனலூர் ரயில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து புறப்படும். கடந்த டிசம்பர் 17ஆம் தேதி பெய்த தொடர் கனமழை காரணமாக ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும் நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் மறு அறிவிப்பு வரும் வரை நெல்லை ரயில் நிலையம் செயல்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.