இந்தோனேஷியாவின் வடக்கு சும த்ராவில் ஜோஸ்வா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு ஜோஸ்வா தங்கி இருந்த வீட்டின் கூரையில் ஒரு பெரிய கல் விழுந்தது. அந்த கல் தரையை பிளந்து கொண்டு 15 சென்டிமீட்டர் ஆழத்திற்கு சென்றதைப் பார்த்து ஜோஸ்வா அதிர்ச்சியடைந்தார். அந்த கல் 2 கிலோ எடை உடையது. மேலும் 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்பது தெரியவந்தது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜாரெட் காலின்ஸ் என்ற தொழிலதிபர் அந்த கல் பற்றி அறிந்தார். அவர் இந்திய மதிப்பில் சுமார் 14 கோடி ரூபாய் கொடுத்து ஜோஸ்வாவிடம் இருந்து அந்த கல்லை வாங்கியுள்ளார். இதுகுறித்து ஜோஸ்வா கூறியதாவது, நான் சவப்பெட்டிகள் தயாரித்து வந்தேன். அதில் எனக்கு வருமானம் இல்லை. இப்போது என் வாழ்க்கையே மாறிவிட்டது. எனக்கு கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை தேவாலயம் கட்டுவதற்கு பயன்படுத்த விரும்புகிறேன் என கூறியுள்ளார்.