சிலி நாட்டை சேர்ந்த ஒரு இளைஞர் அவரது வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அப்பாவின் பழைய வங்கி கணக்கு புத்தகம் ஒன்று கிடைத்தது. அதனை பார்த்து இளைஞர் அதிர்ச்சி அடைந்தார்.

அவரது அப்பா வீடு கட்டுவதற்காக சேமித்து வைத்த தொகையை பார்த்து அதிர்ந்து போன இளைஞர் பாஸ்புக் எடுத்துக்கொண்டு அவரது அப்பா சேமிப்பு கணக்கு வைத்துள்ள வங்கிக்கு சென்றுள்ளார். அந்த வங்கி நிர்வாகத்திடம் பணத்தை கேட்டதற்கு வங்கி நிர்வாகம் தர மறுத்துள்ளது. போதுமான ஆவணங்கள் இருந்தால் மட்டுமே பணத்தை தருவதாக கூறியது.

எனவே இது குறித்து இளைஞர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வங்கி கணக்கு புத்தகத்தில் உள்ள பணத்தை வட்டியுடன் சேர்த்து கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

நீதிமன்றம் அளித்த உத்தரவின் பெயரில் வங்கி நிர்வாகம் பணத்தை அந்த இளைஞரிடம் கொடுத்தது. பணத்தின் தொகை இந்திய மதிப்பிற்கு சுமார் 10 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. மாதம் ஒரு சில ஆயிரம் சம்பாதித்த இளைஞர்களுக்கு திடீரென பத்து கோடி கிடைத்ததால் அந்தப் பகுதியினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.