
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அதற்கு முன்னதாக திறந்த வெளி பேருந்தில் மும்பையை உலகக்கோப்பையுடன் இந்திய வீரர்கள் சுற்றி வந்தனர். அப்போது ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டதால் மும்பை நகரமே ஸ்தம்பித்து போனது. இதைத்தொடர்ந்து வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்ற போது மைதானத்தை வீரர்கள் அனைவரும் உலகக்கோப்பையுடன் சுற்றி வந்தனர்.
அந்த சமயத்தில் அவர்கள் வந்தே மாதரம் (மா துஜே சலாம்) என்ற பாடலை உற்சகமாக பாடினர். இந்த பாடலை பிசிசிஐ தங்களுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இதை பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் பகிர்ந்துள்ளார். அதாவது இந்த பாடல் ஏ.ஆர் ரகுமான் உருவாக்கிய வந்தே மாதரம் ஆல்பத்தில் இடம்பெற்றதாகும். இந்த பாடல் கடந்த 1997 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு வெளியிடப்பட்டது. மேலும் 27 ஆண்டுகளைக் கடந்தும் இந்த பாடல் இன்னும் தேச உணர்வை தூண்டும் விதமாக ஒலிப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக அந்தப் பாடலின் இயக்குனர் பரத் பாலாவும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Vande Mataram 🇮🇳 🏆 ❤️ 🤝👏 https://t.co/C45rNyrtNg
— A.R.Rahman (@arrahman) July 4, 2024