தேசிய விருது நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து பல சர்ச்சைகளும் எழுந்துள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களுக்கு தான் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. அதனால் தமிழ் திரைப்படங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாட்டு ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதன்படி தேசிய விருதியில் நடுவர்கள் காட்டும் பாரபட்சம் ஆறு வருடங்களுக்கு முன்பு ஏ ஆர் முருகதாஸ் போட்ட ஒரு ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.