தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி உள்ள  நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கிறார். அவருடைய கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் பிரம்மாண்ட மாநாடு எங்கு நடத்துவது என்பது குறித்து பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதோடு அதற்கான இடங்களையும் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் சேலத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் என்று கூறப்பட்டது.

ஆனால் தற்போது விக்கிரவாண்டியில் தான் முதல் மாநாடு நடைபெறும் என்று தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி முதல் மாநாடு செப்டம்பர் 22 அல்லது 26 இல் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு மாநாட்டுக்கு ஒரு நாள் முன்னதாகவே விழுப்புரத்திற்கு வரும் விஜய் அங்கு தங்கி இருந்து பணிகளை ஆராய இருக்கிறார். அதன்பின் மாலை 3 மணிக்கு மாநாடு தொடங்கும் நிலையில் 6 மணிக்கு நடிகர் விஜய் உரையாற்றுவார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. மேலும் நடிகர் விஜயின் முதல் மாநாடு குறித்த எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருப்பதால் எங்கு நடைபெறும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியிலும் அதிக அளவில் இருக்கிறது..