நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பிரேம் (31) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கூரியர் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக ரம்யா (21) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில், கேத்தரின் ஏஞ்சல் என்ற 5 மாத பெண் குழந்தை இருக்கிறது. இதில் பிரேம் தினமும் காலை 7 மணிக்கு வேலைக்கு செல்லும் நிலையில் இரவு 9 மணிக்கு வீட்டிற்கு திரும்புவார். இதேபோன்று நேற்று முன்தினம் வழக்கம்போல் பிரேம் காலை வேலைக்கு சென்றார். அப்போது குழந்தையின் கண்ணம் சிவந்திருந்ததோடு எந்த ஒரு அசைவும் இல்லாமல் இருந்தது. இதனால் அச்சமடைந்த ரம்யா தன்னுடைய குழந்தையை ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக கூறிவிட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரம்யா ஊட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதாவது குழந்தை சில நாட்களாக அழுது கொண்டே இருந்துள்ளது. இதனால் குழந்தையை பிரேம் அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் ரம்யாவுக்கு அவருடைய கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதேபோன்று சம்பவ நாளில் ரம்யா துணி துவைத்து கொண்டிருந்தபோது குழந்தை தொடர்ந்த அழுது கொண்டிருந்தது. இதனால் ஆத்திரத்தில் பிரேம் குழந்தையை அடித்துள்ளார். இதில் மூளைக்கு செல்லும் ரத்தம் உறைந்து குழந்தை பரிதாபமாக இறந்தது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் பிரேமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது வேதனை தாங்காமல் ரம்யா கதறி துடித்தது அங்கிருந்து அனைவர்களையும் கலங்க வைத்தது.