
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். இவர் நாடாளுமன்ற தேர்தலில் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மாண்டி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். இதனால் தற்போது அந்த தொகுதியில் கங்கனா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது நடிகை கங்கனா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவரிடம் நீங்கள் தேர்தலில் போட்டியிடப் போவதால் பாலிவுட் சினிமாவை விட்டு விலகப் போகிறீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் என்னால் தற்போது சினிமாவை விட்டு விலக முடியாது என்று கூறினார். அதன் பிறகு என்னுடைய பல படங்கள் முடிக்கப்படாமல் நிலுவையில் இருக்கிறது. மேலும் இதனால் தற்போதைக்கு சினிமாவை விட்டு விலகும் எண்ணம் கிடையாது என்று கூறினார்.