மதுரை மாவட்டத்தில் நேற்று நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட நிலையில் சீமான் கலந்து கொண்ட ஆலோசனை வழங்கினார். ஆலோசனை கூட்டத்திற்கு முன்பாக சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் தற்போது கட்சத்தீவு மீட்பு விவகாரம் என்பது பேசும் பொருளாக மாறிவிட்டது. இதனை நாங்கள் வித்தியாசமாக பார்க்கிறோம்.

அதாவது ஒருவன் கொள்ளையடிப்பது திருடுவது போன்ற குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் நிலையில் திருவிழா என்று வந்துவிட்டால் காப்பு கட்டி விட்டு ஒரு வாரத்திற்கு விரதம் இருப்பான். அப்போது அவன் சாமி கூட ஆடுவான். அந்த சமயத்தில் அவன் செய்த குற்றங்களை நியாயப்படுத்தி புனிதம் ஆக்கி விடுவான். அதேபோன்றுதான் தற்போது கட்சத்தீவு மீட்பு விவகாரமும் இருக்கிறது. அது கோவில் திருவிழா இது தேர்தல் திருவிழா அவ்வளவுதான் வித்தியாசம். மேலும் தேர்தல் வந்துவிட்டால் திமுக, அதிமுக, பாமக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு கட்சி தீவு மீது காதல் வந்துவிடும் என்று கூறினார்.