பாகிஸ்தானில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது ஒன்பதாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்ததால் சொந்த அண்ணனே தன்னுடைய சகோதரியை சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் ஹுஜ்ரா ஷா முகீமின் அடாரி ரோடு பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் சிறுமியை காப்பாற்ற முயன்ற போதும் அவரை காப்பாற்ற முடியவில்லை. சிறுமியின் சொந்த வீட்டில் இந்த சம்பவம் நடந்த நிலையில் உடனே விரைந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கொலையாளியை வலை வீசி தேடி வருகிறார்கள்.