
சேலம் மாவட்டத்தில் உள்ள மணிவிழந்தான் தெற்கு பகுதியில் ஜெகதீசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் ஜெகதீசன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கான தேர்வுக்கு படித்து கொண்டிருந்தார். நேற்று மாலை சொந்த வேலை காரணமாக ஜெகதீசன் மோட்டார் சைக்கிளில் தம்மம்பட்டிக்கு சென்றார். பின்னர் மீண்டும் ஆத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் கீழ்கணவாய் அருகே சென்ற போது மணல் லோடு ஏற்றி வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெகதீசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று ஜெகதீசனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.