
பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேர்வு முடிந்த பிறகு மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். அப்போது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுப்பது முக்கியம். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
இந்த நிலையில் சென்னை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர், பொதுத்தேர்வு முடியும் நாளன்று மாணவர்கள் அமைதியாக பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்ல பள்ளி வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ளூர் காவல் நிலையம் மூலம் காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.