
தேர்வு முடிவுகள் மாணவர்களின் வாழ்க்கையை மதிப்பீடு செய்வதற்கானது அல்ல என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
இந்த தேர்வு முடிவுகள் மாணவர்களின் வாழ்க்கையை மதிப்பீடு செய்வதற்கானது கிடையாது. கற்றலை அளவீடு செய்வதற்கான தேர்வு முடிவுகள் மட்டுமே என்பதை மாணவச் செல்வங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அனைவருக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.