இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் நாடு முழுவதும் கடந்த ஆறு மாதங்களில் லட்சக்கணக்கான நம்பர்கள் முடக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. சில வருடங்களாக செல்போன் வாடிக்கையாளர்களுக்கு தேவையில்லாத எஸ்எம்எஸ் அனுப்புவது, விளம்பர கால் செய்வது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்தது.

அதன் அடிப்படையில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) அந்த எண்களை ஆய்வு செய்து விசாரித்துள்ளது. அதன் அடிப்படையில் கடந்த 6 மாதங்களில் 2.75 லட்சம் நண்பர்களே முடக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இது மட்டும் இல்லாமல் புகார் வந்த 50 நிறுவனங்களுக்கு தடை விதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கூறியுள்ளது.