தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி தைப்பூச திருவிழா முருகன் கோவிலில் வெளி விமர்சையாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று மாலை தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனைக் காண ஏராளமான பக்தர்கள் பலனைக்கே பாதயாத்திரை ஆக வந்த வண்ணம் உள்ளனர். பழனி மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் தைப்பூசத்தை முன்னிட்டு வழக்கத்தை விட பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.

இந்நிலையில் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் சேவையை திருத்தணிக்கு செல்லும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.