
மத்திய மாநில அரசுகள் ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு தொழில் தொடங்குவதற்கு கடனுதவிகளையும் வழங்கி வருகிறது. அந்தவகையில் சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம் பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக தொழில் முனவோர் திட்டத்தின் கீழ் தையல் பயிற்சி பயின்றவர்கள் மற்றும் தையல் தொழிலுக்கு ஏற்கனவே கடனுதவி பெற்று தொழில் செய்யும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த தகுதியான பயனாளிகளிடமிருந்து தையல் பணிகள் செய்வதற்கு கடனுதவி பெற விண்ணப்பங்கள் தாடகோ இணையதளமான www.tahdco.com மூலம் வரவேற்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.