
தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் திமுகவினை அரசியல் எதிரியாகவும் பாஜகவினை கொள்கை எதிரியாகவும் அறிவித்துள்ளார். அவர் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறான். சமீபத்தில் நடந்த அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவின்போது 200 தொகுதிகளில் வெல்வோம் என்று திமுகவினர் இறுமாப்புடன் கூறுகிறார்கள் எனவும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் பொதுமக்களை அவர்களை மைனஸ் ஆக்கி காட்டுவார்கள் என்றும் கூறினார். இதன் காரணமாக திமுகவினர் விஜய்க்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் சென்னை பூந்தமல்லியில் துணை முதல்வர் உதயநிதியின் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்க விழா நடைபெற்ற போது அந்த விழாவில் அமைச்சர் நாசர் கலந்து கொண்டார்.
அப்போது அவர் கடுமையாக விஜயை விமர்சித்து பேசினார். அவர் பேசியதாவது, சினிமாவில் போர்டு ஆனவங்க அடுத்ததாக அரசியலுக்கு வாராங்க. சினிமாவில் நடிகைகள் போர்டு அவுட் நல்லெண்ணெய் வியாபார விளம்பரத்திற்கு வருகிறார்கள். அதுவே நடிகர்கள் எல்லோரும் போர்டு அவுட் ஆகிவிட்டால் அரசியலுக்கு வந்து விடுகிறார்கள். அந்த வகையில் தற்போது நான் தான் அடுத்த முதல்வர் என்று கூறிவிட்டு ஒருவர் வந்துள்ளார். ஒரு தொகுதிக்கு 2000 ஓட்டுகள் கூட இல்லாத ஒரு புது கட்சி மிசாவையே பார்த்த திமுகவை எதிர்க்கிறார். மேலும் யார் நினைத்தாலும் திமுகவில் வெற்றியை தடுக்க முடியாது என்று சவால் விட்டார்.