
நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்களில் புகையிலை எதிர்ப்பு எச்சரிக்கைகளுக்கான விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஓடிடி தளங்களில் நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் இடையிலும் 39 விநாடிகளுக்கு எச்சரிக்கை படங்கள் காட்டப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புகையிலை காட்சிகளின்போது, ஸ்க்ரீன் கீழ்ப்பகுதியில் எச்சரிக்கை வாசகத்தை பதிவிட்டு புகையிலை பாதிப்பு ஆடியோவை 20 விநாடிகள் தொடக்கத்திலும், இறுதியிலும் ஒலிபரப்ப வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து ஓடிடியில் வீடியோ வெளியிடுவோர்கள் கட்டாயம் இந்த விதிகளை கடைப்பிடிக்காவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.