
சமீபத்தில் பாங்க் ஆப் பரோடா 360 டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது வருடத்தில் 360 நாட்களுக்கு பொருந்தும். பாங்க் ஆஃப் பரோடா அறிமுகப்படுத்திய 360 டெபாசிட் திட்டம் 7.60 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. இந்த சிறப்பு குறுகிய கால சில்லறை வைப்புத் திட்டம் மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 0.50% வழங்குகிறது. குறிப்பாக ரூ.2 கோடி வரையிலான இந்த வைப்புத்தொகைகளுக்கு இந்த வட்டி விகிதம் பொருந்தும்.