தெலுங்கானா மாநிலம் ஜஹவர் நகர் என்னும் பகுதி உள்ளது. இங்கு ஒன்றரை வயது குழந்தை வீட்டின் முன்பு இருந்து விளையாடிக் கொண்டிருந்தது. அந்தப் பகுதியில் தெரு நாய்களின் கூட்டம் அதிகம். இந்நிலையில் தெருவில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை அங்குள்ள தெரு நாய்கள் தலை முடியை இழுத்துச் சென்று கடித்து குதறியது.

இதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மக்கள் சாலையில் குழந்தையின் தலைமுடி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே குழந்தையின் பெற்றோர்களிடம் இவ்வாறு முடி கிடப்பதை கூறினர். இதைத்தொடர்ந்து குழந்தையை அவர்கள் தேடிய போது  நாய்கள் குதறப்பட்ட நிலையில் கிடந்தது. உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.