கோவையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் சோமயம்பாளையம் குட்டையின் மதகு அருகே உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது.

இவ்வாறு தொடர்ந்து குட்டையில் இருந்து தண்ணீர் வெளியேறி வந்தால் தரைப்பாலம் உடையும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தண்ணீர் வெளியேறுவதை தடுக்க மணல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர்.