
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை சடோரா என்னும் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த இரு பெண்களை மின்னல் தாக்கியது. இதில் அந்த இரு பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து சத்தர்பூர் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுவன் மின்னல் தாக்கி பலியானான்.
இதேப்போன்று இயற்கை வேளாண்மை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். இதனைத்தொடர்ந்து குவாலியர் பகுதியில் மழைக்கு ஒதுங்கிய இருவர் உயிரிழந்தனர். பின்பு அஜய்கர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் மின்னல் தாக்கி பலியானார். மேலும் இந்த சம்பவத்தால் மொத்தம் 7 உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது.