
ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் அந்நாட்டின் தலைநகர் காபுல் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. இந்த கனமழையால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஊருக்குள் புகுந்ததால் பல வீடுகள் வெள்ளத்தில் மிதக்கிறது.
இந்நிலையில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி இது வரை 50 பேர் பலியாகியுள்ளனர். இந்த தகவலை என் நாட்டை ஆட்சி செய்யும் தலிபான் அரசு தெரிவித்துள்ளது. மேலும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மூலம் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.