சவுதி அரேபியாவில் உள்ள புனித மெக்காவுக்கு ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் 1.6 மில்லியன் பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து அங்கு கடுமையான வெப்ப அலை நிலவி வருவதால் ஏராளமான யாத்திரீகர்கள் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்து பலியாகும் சம்பவம் அரங்கேறி வருகிறது.

அந்த வகையில் இதுவரை 1301 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன் பிறகு அனுமதி இல்லாமல் ஏராளமானோர் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர். மேலும் அனுமதி பெறாமல் பயணம் மேற்கொண்ட 1,40,000 பேர் உட்பட சுமார் ரூ.5 லட்சம் பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.