ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா நகரில் நீட் மற்றும் ஜேஇஇ போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான மாணவர்கள் அங்கு சென்று படித்து வருகிறார்கள். இங்குள்ள தனியார் பயிற்சி மையத்தில் ஏராளமான மாணவர்கள் படித்து வரும் நிலையில் அடிக்கடி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

அதன்படி தற்போது நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 17 வயது மாணவர் ஒருவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது நடப்பாண்டில் 12-வது தற்கொலை ஆகும். அதாவது பீகாரை சேர்ந்த ஹிரிஷித் குமார் என்ற மாணவர் அங்கு வாடகைக்கு அறை எடுத்து தங்கி படித்து வந்த நிலையில் திடீரென அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்நிலையில் அவருடைய அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருப்பதை நேற்று மதியம் தான் பார்த்துள்ளனர். அதன் பிறகு காவல்துறையினர் வந்து பார்த்தபோது சடலம் அழுக ஆரம்பித்தது தெரியவந்தது. இதனால் முன்னதாகவே அந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.