
மியான்மரில் ராணுவ ஆட்சியை தொடர்வதற்காக அவசரநிலை மேலும் ஆறு மாதங்கள் நீட்டிக்கக்கப்பட்டுள்ளது. ஜனநாயக முறையில் மீண்டும் தேர்தல் நடத்துவதில் இருந்து விதி விலக்கு அளிப்பதற்கான இந்த அவசர நிலை காலாவதி ஆவதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அந்த நாட்டில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆங் சான் சூகியின் அரசை ராணுவம் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி கலைத்தது. ராணுவ ஆட்சிக்கு எதிராக வெடித்த பொதுமக்களின் போராட்டங்களை ராணுவம் இரும்பு கரம் கொண்டு நசுக்கியது. தேர்தல் நடத்துவதை தவிர்க்கும் வகையில் அவசர நிலை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.