
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி இருசக்கர வாகனத்திற்கு நடைபெறுகிறது. இதனால் பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை போலீசார் நிறுத்தி விசாரித்தனர். அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் போலீசார் அவர் ஓட்டி வந்த இருசக்கரத்தின் நம்பர் பிளேட்டை சோதனை செய்தனர்.
அப்போது அந்த நம்பர் போலியானது என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் காமநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சக்தி குமார் என்பதும் l, பொள்ளாச்சி உட்பட பல்வேறு இடங்களில் 15 இருசக்கர வாகனங்களை திருடி வைத்திருப்பதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் சக்தி குமாரை கைது செய்து, இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.