
நடிகை தமன்னா விஜய் வர்மாவை காதலிப்பதாக சில வருடங்களுக்கு முன்பாக கிசுகிசுக்கப்பட்டது. அவர்கள் பார்ட்டியில் முத்தம் கொடுத்து கொண்டிருக்கும் போட்டோவும் இணையத்தில் வைரலானது. அதன் பிறகு தான் அவர்கள் தங்களுடைய காதலை வெளிப்படையாக பொதுவெளியில் அறிவித்தார்கள். பின்பு ஜோடியாக வெளியே சுற்ற ஆரம்பித்தார்கள். ஆனால் தற்போது அவர்கள் இருவரும் திடீரென்று பிரேக் அப் செய்து பிரிந்து விட்டார்கள்.
இந்த நிலையில் அவர்களுடைய பிரிவுக்கு காரணம் என்ன என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது நடிகை தமன்னா திருமணம் செய்து கொண்டு செட்டிலாக வேண்டும் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே வந்தாராம். ஆனால் விஜய் வர்மா அதற்கு தயாராக இல்லை என்று கூறிவிட்டாராம். இதனால் தான் இருவருக்கும் நடுவில் தொடர்ந்து பிரச்சினை வந்ததாகவும் அதுவே தற்போது பிரேக் அப்பிற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.