
அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் ஓபிஎஸ் பாஜக கூட்டணியில் இணைய முனைப்பு காட்டி வருகின்றார். மேலும் அடிக்கடி இரட்டை இலை சின்னம் எங்கள் தரப்புக்கு தான் வரும் எனவும் கூறி வருகின்றார். இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது, தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை, தேர்தல் தேதி அறிவித்த பிறகு தான் கூட்டணி முழுமை பெறும். பாஜகவில் இருந்து பலரும் அதிமுகவில் சேர்ந்து வருகிறார்கள். ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு செல்வது அவரவர் ஜனநாயகம் அதை யாரும் தடுக்க முடியாது என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.