
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஜனவரி மாதம் 25-ம் தேதி இந்தியாவில் மட்டும் 8000 திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த நிலையில் பதான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் மழை பொழிந்து வருகிறது.
இந்நிலையில் பதான் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் நிலவரம் குறித்த தகவலை தற்போது படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது. அதன்படி இப்படம் இந்தியாவில் 355 கோடியும், வெளிநாடுகளில் 208 கோடியும் வசூலித்துள்ளது. மேலும் மொத்தமாக பதான் திரைப்படம் 543 கோடி வசூல் சாதனை புரிந்துள்ளது.
பதான் படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் ரசிகர்கள் பலரும் ஷாருக்கானை கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் பதான் படத்தின் வெற்றியால் நேற்று சக்சஸ் மீட் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஷாரருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்ட நிலையில் நிகழ்ச்சியில் நடிகர் ஷாருக்கான் மிகவும் உருக்கமாக பேசினார். அவர் பேசியதாவது, நான் சில வருடங்களாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தேன்.
இதற்கு முன்பு என் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் தோல்வியடைந்ததால் இனி சினிமாவை விட்டு விலகி விடலாம் என்ற முடிவில் இருந்தேன். நான் ஹோட்டல் தொழில் தொடங்க வேண்டும் என்பதற்காக சமையல் கூட கற்றுக் கொண்டேன். ஆனால் பதான் திரைப்படம் சினிமாவில் எனக்கு மீண்டும் ஒரு வாழ்க்கையை பெற்றுக் கொடுத்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும் நடிகர் ஷாருக் கான் பேசியது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.