உத்திரபிரதேச மாநிலத்தில் சமீபத்தில் ஒரு வாலிபரின் கட்டாயத்தினால் இன்னொரு வாலிபருக்கு பாலினமாற்று அறுவை சிகிச்சை நடந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்தான அதிர்ச்சிகரமான தகவல்கள் தற்போது வெளியான நிலையில் சம்பந்தப்பட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது மன்சூர் பூரில் பெக்ராஜ்பூர் மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு முகாஜித் (20) என்ற வாலிபருக்கு பிறப்புறுப்பை நீக்கி கட்டாய பாலின அறுவை மாற்று சிகிச்சையை மருத்துவர்கள் செய்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த வாலிபர் தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து கூறியதாவது, ஓம் பிரகாஷ் என்பவர் என்னை நிர்வாணமாக படம் பிடித்து இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டினார். அவர் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதோடு அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தினார். இதற்கு நான் சம்மதிக்காவிட்டால் என்னுடைய தந்தையை கொலை செய்வதாக மிரட்டினார். அவருடைய சூழ்ச்சியால் தற்போது நான் பெண்ணாக மாறிவிட்டதால் என்னுடன் வசிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார். மேலும் அவர் என்னை தொடர்ந்து மிரட்டுகிறார் என்று கூறினார். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஓம் பிரகாஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.