தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் மக்களின் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி வார இறுதி நாட்கள் மற்றும் பக்ரீத் பண்டிகை என தற்போது தொடர் விடுமுறை வருவதால் இதனை கருத்தில் கொண்டு சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சென்னையில் இருந்து 1300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்று ஜூன் 14 முதல் ஜூன் 17ஆம் தேதி வரை சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்தும் கோயம்பேட்டில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.