பெங்களூரைச் சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியதாவது, எனக்கு 2022-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. எங்களுக்குள் தாம்பத்தியம் நடக்கவே இல்லை. குழந்தை பெற்றுக் கொண்டால் அழகு கெட்டுப் போய்விடும். அதனால் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் என மனைவி கூறுகிறார். நான் நெருங்கி சென்றால், என்னை தொட்டால் உங்கள் பெயரை எழுதி வைத்துவிட்டு வாழ்க்கையை முடித்துக் கொள்வேன் என மிரட்டுகிறார். அதுமட்டுமில்லாமல் தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டும் என்றால் 5 ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும் என தொந்தரவு செய்கிறார். மனைவியை விவாகரத்து செய்துவிடலாம் என நினைத்தால் 45 லட்சம் பணம் கேட்டு மிரட்டுகிறார்.

எனவே சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இன்ஜினியரின் மனைவியும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூடுதலாக வரதட்சணை கேட்டு கணவர் என்னை மிரட்டுகிறார். எனது கணவர் கூறும் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. திருமணமான நாளில் இருந்து என்னிடம் வரதட்சணை கேட்டு என்னை அடித்து துன்புறுத்துகிறார். குழந்தை பெற்றுக் கொண்டால் அவரை விட்டு என்னால் செல்ல முடியாது. அவர் செய்யும் கொடுமைகளை நான் தாங்கிக் கொண்டு இருக்க வேண்டும் என நினைத்தார். குழந்தை பெற்றுக் கொண்டால் அதன் வாழ்க்கையும் வீணாகி விடக்கூடாது என்பதற்காக குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்தேன் என கூறியுள்ளார். போலீஸ் 2 புகார்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.