டெல்லியில் உள்ள சாகர்பூர் எனும் இடத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளில் ஒரு பதற வைக்கும் காட்சி பதிவாகியுள்ளது. அந்த காணொளி சமூக வலைதளத்திலும் வெளியாகி பார்ப்போரை பதறச் செய்துள்ளது.

அந்த காணொளியில் மூன்று வயது சிறுமி ஒருவர் திடீரென சாலையில் வந்து விழுகிறார். விசாரணையில் அவர் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. சிறுமி விழுந்த சிறிது நேரத்திலேயே அக்கம் பக்கத்தினர் அவ்விடத்தில் கூட பெற்றோரும் பதறி அடித்துக் கொண்டு வந்து சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பால்கனியில் காய வைத்திருந்த துணியை எடுக்கும் சமயத்தில் சிறுமி தவறி கீழே விழுந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.