சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் ரயில்களில் வார நாட்களில் 50 சதவீதம், வார இறுதி நாட்களில் 75% தண்ணீர் நிரப்பப்படும். ஆனால் வெயில் காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்ததால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு 25 சதவீதம் மட்டுமே நிரப்பப்படுகிறது. இதனால் ரயில் புறப்பட்ட இரண்டு முதல் மூன்று மணி நேரத்தில் தண்ணீர் தீர்ந்து விடுவதால் கழிவறை உள்ளிட்டவற்றை பயன்படுத்த முடியாமல் பயணிகள் திண்டாடி வருகின்றனர்.