
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நேரடி மற்றும் தொலைநிலை கல்வி என்று பல பட்டப்படிப்புகள் உள்ள நிலையில் தொலைநிலை கல்வி மாணவர் சேர்க்கை தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்கத்தில் நேரடி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் தற்போது செப்டம்பர் 30-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த படிப்பில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் தாங்கள் பயில விரும்பும் படிப்புக்கான தகவல்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் எனவும் பதிவு செய்ய விருப்பமுள்ள மாணவர்கள் இணையதளம் அல்லது நேரடியாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து கூடுதல் விவரங்கள் அறிய 04520 2459413, 2535973, 7540080932 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.