தொலைந்தவர்களை மீட்க QR CODE உள்ள டாலரை உருவாக்கி, இளைஞர் ஒருவர் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்கள், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோர் தொலைந்துபோனால் கண்டுபிடிக்க உதவும்  விதமாக  பிரத்யேக QR Code அடங்கிய பேட்ஜ் ஒன்றை அக்ஷய் என்ற இளைஞர் இந்த பேட்ஜை வடிவமைத்து்ள்ளார். அதாவது இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த பேட்ஜை அணிந்துள்ளவர் காணாமல் போகும் பட்சத்தில் பேட்ஜில் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்ய வேண்டும்.

இதன் மூலம் காணாமல் போனவரின் பெயர், முகவரி, ரத்த வகை, தொலைபேசி எண் உள்ளிட்டவற்றை கண்டறிந்து அவர்களை உரிய இடத்தில் சேர்க்க முடியும். இளைஞரின் இந்த புதிய முயற்சியை பலரும் பாராட்டியுள்ளனர்.