ரேஷன் பொருட்கள் பெற அளிக்கப்படும் பிளாஸ்டிக் ஸ்மார்ட் அட்டை தொலைந்து போனால், திருடு போனால் அல்லது உடைந்து போனால் மாற்று அட்டை பெற தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடும்பத் தலைவர் அல்லது தலைவி சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகம் சென்று நேரில் விண்ணப்பித்து அல்லது ஆன்லைனில் விண்ணப்பித்து புதிய ரேஷன் அட்டை பெறலாம்.

ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க https://www.tnpds.gov.in/என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று வலது புறத்தில் நகல் மின்னணு குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க என்ற பகுதியை அழுத்தி உள் நுழைய வேண்டும். பிறகு ரேஷனில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண், கேப்சா மற்றும் ஓடிபியை பதிவிட்டால் புதிய பக்கம் திறக்கும். அதில் 45 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் வீட்டிற்கு தபால் மூலம் ஸ்மார்ட் அட்டை அனுப்பி வைக்கப்படும். அதை வைத்து ரேஷன் பொருட்களை பெறலாம்.